திமுக மாநாட்டின் 4000 கொடிகம்பங்களும் கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் : ஸ்டாலின்
மாநாட்டுத் திடலைச் சுற்றியுள்ள 4000 கொடிகம்பங்களும் கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு : ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெற்ற திடலைச்சுற்றி வைக்கப்பட்டிருக்கும் 4000 கொடிக்கம்பங்களும் மாவட்டத்தில் உள்ள கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திமுகவின் மண்டல மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

இதில் திமுக புதிய ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் அவர் பேசுகையில், மாநாட்டுத்திடலைச் சுற்றி வைக்கப்பட்டுள்ள 4000 கொடிக்கம்பங்களும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமம்தோறும் கொண்டு சென்று நடப்படும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநாட்டு முகப்பில், வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பம்அப்புறப்படுத்தப்படாமல், இதே நெடுஞ்சாலையில் அனுமதிபெற்று நிரந்தரமாக நிறுவப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், மாநாட்டிற்கு வந்திருக்கும் தொண்டர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்ட கழிவறைகளும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications