துப்பாக்கிச் சூடு: மனு வாங்க மறுப்பு- தலைமை செயலகத்தில் பாரதிராஜா உட்பட 50 பேர் உள்ளிருப்பு தர்ணா!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மனு கொடுக்க வந்த பாரதிராஜா உள்ளிட்டோர், தலைமை செயலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி மனு கொடுக்க வந்த திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்க திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் தலைமைச் செயலகக்துக்கு மாலையில் வந்தனர்.
ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதையடுத்து, தலைமை செயலக வளாகத்தில் பாரதிராஜா, அமீர், திருமுருகன் காந்தி உள்பட 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுடைய மனுவை வாங்குவதற்கு கூட தலைமைச் செயலர் வரவில்லை என்று அமீர் கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications