"அபியும், நானும்".. அவ பிரண்ட்தான்.. எப்படிங்க தப்பா பேசலாம்.. 2019ஐ உலுக்கிய டிக்டாக் அக்கப்போர்
சென்னை: இந்த வருடம் நடந்த எத்தனையோ சம்பவங்களுக்கு நடுவில் பரபரப்பில்லாமல் வைத்திருந்தது டிக்டாக் சமாச்சாரங்கள்.. டிக்டாக்கினால் பல குடும்பங்கள் பிரிந்து வரும் நிலையில், இந்த வருடம் அதிகமாக பேசப்பட்ட ஒரு டிக்டாக் சம்பவம்தான் "அபியும் - வினியும்"!
தேவகோட்டை அருகே கடம்பா குடியைச் சேர்ந்த வினிதா என்ற 20 வயது பெண்ணுக்கு லியோ என்பவருடன் திருமணம் ஆனது. கணவன் வெளிநாட்டில் வேலை பார்க்க.. பொழுதை கழிக்க வினிதா டிக்டாக் உலகில் நுழைந்தார்.
அப்போதுதான், திருவிழாக்களில் டான்ஸ் ஆடும் அபியுடன் அறிமுகம் ஆனது.. நட்பு வளர்ந்தது.. நெருக்கம் கூடியது. இந்த சமயத்தில்தான் அதாவது, கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, புது மனைவியை பார்க்க ஆசையுடன் லியோ வெளிநாட்டில் இருந்து வந்தார். ஆனால் மனைவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்ததாகவும், இதனால் வினிதாவின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அபியுடன் "நெருக்கமான" போட்டோக்களை கண்டு கணவர் அதிர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

நகைகள்
பின்னர், மனைவியை மாமியார் வீட்டுக்கு கூட்டி சென்று நடந்த விஷயங்களை கூறி லியோ அறிவுறுத்தியும், வினிதா வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு அபியுடன் ஓடிவிட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. வினிதாவின் குடும்பத்தினரே இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லி, போலீசில் புகார் அளித்து, அபியும், வினோதினியும் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோவையும் ஒப்படைத்தனர்.

அபி
இந்த புகாரின் பேரில் அபியையும், வினிதாவையும் தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினார்.இதனிடையே, அபியுடன் ஓடிப்போனதாக சொல்லப்பட்ட வினிதா சிவகங்கை ஸ்டேஷனில் திடீரென தஞ்சம் அடைந்தார். முன்னதாக, இவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், அபி என்ற பெண் தனக்கு வெறும் டிக்டாக் தோழிதான் என்றும் விளக்கம் அளித்தார். "அவ என் டிக்டாக் ஃபிரண்டு. வேற ஒன்னுமே கிடையாது. அந்த பொண்ணுகிட்டே ஏன் பேசுறேன்னு பிரச்சனை செய்தார். அதனாலதான் வீட்டை விட்டு போனேன்" என்றார் வினிதா.

விசாரணை
எனினும், வினிதாவிடம் மகளிர் போலீசார் ஸ்பெஷல் கேர் எடுத்துதான் இந்த வழக்கை விசாரித்தனர். இந்த விசாரணை முடியும்வரை, வினிதாவை, தாய், அல்லது கணவனுடன் செல்லுமாறு போலீசார் சொன்னார்கள். ஆனால், இருவருடனும் போக வினிதா மறுத்துவிட்டார். அதனால், காரைக்குடியில் உள்ள மகளிர் ஹாஸ்டலில் தங்க வைத்தனர்.

பரபரப்பு
ஆனால் அங்கிருந்து வினிதா எஸ்கேப் ஆகி விட்டதாகவும், போகும்போது, ஹாஸ்டல் வார்டன் செல்போனையும் எடுத்து கொண்டு போய்விட்டதாகவும் சொல்லப்பட்டது.. இது சம்பந்தமாக அந்த பெண் வார்டன் புகாரும் தந்தாராம்.. இதற்கு பிறகு அபி - வினிதா பற்றின விசாரணை என்ன ஆனது என்று தெரியாவிட்டாலும், இந்த இந்த டிக்டாக் தோழிகளின் சம்பவம் மறக்க முடியாத ஒன்றாக பதிந்துவிட்டது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications