குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது- 8 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியுள்ளதால் 8 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த அணையி்ன் மொத்தக் கொள்ளளவு 42 அடியாகும். தொடர் மழை காரணமாக அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து வினோபாநகர், கொங்கர்பாளையம், கோவிலூர், கொங்கர்பாளையம் காலனி, மற்றும் நான்கு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிமாக உள்ளது.

இந்த அணையால் 2500 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 10,000 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதியைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+