வெள்ள நிவாரணம் கோரி தூத்துக்குடியில் அமைச்சர் சண்முகநாதனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி அமைச்சர் சண்முகநாதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் தூத்துக்குடி- நெல்லை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பெய்த கன மழையால் சோரீஸ்புரம், மாதவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் 1000க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த அமைச்சர் சண்முகநாதனை அவர்கள் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுடன் அமைச்சர் சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் இந்த சமாதானத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்து தொடர்ந்தும் மறியல்- முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர். இதனால் தூத்துக்குடி- நெல்லை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஒருவழியாக "இடிந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தருவோம்" என மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் அளித்த உறுதியை ஏற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications