For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்... பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

சதுரகிரி மலையில் காட்டாற்றுவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்...பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!- வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் காட்டாற்றுவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள தாணிப்பாறை அருகே உள்ள சதுரகிரி மலைமேல் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் டிசம்பர்4ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

    Flood hits at Sathuragiri hills due to heavy rains, restrictions for devotees

    ஆனால் கனமழையால் சதுரகிரி மலைப்பகுதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் நீரோட்டம் அதிகரித்து வருவதால பக்தர்கள் மலையில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பு அளிக்கும் விதமாக முன் எச்சரிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மலைஅடிவாரத்தில் நின்றே சுவாமியை கும்பிட்டுவிட்டு செல்கின்றனர். முன்எச்சரிக்கையாகவே பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Due to floods as Sathuragiri hills, devotees were not allowed to offer prayers at Sundara Mahalingeshwarar temple for precautionary measures action taken.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X