பல ஊர்களில் வெள்ளம்.. நிரம்பிய வழியும் ஆறுகள்.. திறந்து விடப்படும் தண்ணீர்.. மக்களுக்கு எச்சரிக்கை!
சென்னை: தமிழகம் முழுக்க கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக விடமால் மழை பெய்துள்ளது. தமிழகம் முழுக்க இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இருக்கும் குளங்கள் எல்லாம் நிரம்பி உள்ளது.

என்ன வெள்ளம்
தொடர் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. கடலூரில் விருத்தாசலம்-வடலூர் சாலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வேறு எங்கு
ரோமாபுரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரியில் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து 1000 கன அடி உபரி நீர்திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 48 அடியில் 45 அடி வரை உயர்ந்ததால் நீர்திறக்கப்பட்டு வருகிறது.

அணை எப்படி
அணைக்கு நீர்வரத்து 2,200 கன அடியாக இருப்பதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி அருகே ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக கடலூர் - சேலம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

காவிரி என்ன
அதேபோல் காவிரியில் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கடலூரில் தொடர் மழையால் வீராணம் ஏரியில் இருந்து பாதுகாப்பு காரணமாக 5,300 கன அடி நீர்திறக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 28,500 கன அடி நீர்திறக்கப்பட்டு உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications