நெல்லை மாவட்ட வெள்ளம்... செங்கோட்டையில் அடித்து செல்லப்பட்ட பாலத்தின் தூண்கள்
நெல்லை மாவட்டத்தில் பெய்து வந்த மழை காரணமாக செங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் தூண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்து வந்த மழை காரணமாக செங்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் தூண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா பகுதிகளில் நேற்று நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வனப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகியது. இதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள நீர் நிலைகள், கால்வாய்களுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது.

பல இடங்களில் வயல்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்களுக்கு சேதம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கண்ணுப்புள்ளிமேட்டு கூடாறு அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. இதன் காரணமாக குளம் உடைந்துவிடாமல் இருக்க குளத்தின் நீரை தஞ்சாவூர் குளத்தின் வாய்க்காலில் திறந்து விட்டனர்.
இந்த வாய்க்கால் செங்கோட்டையில் உள்ளது. இதில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியபாலம் அமைக்கும் பணி கடந்த 40 நாட்களாக நடந்து வருகிறது.
40அடி அகலத்தில் அமைக்கப்படும் இந்த பாலத்திற்கு நாளை காங்கிரீட் போடப்பட இருந்தது. இந்த நிலையில் குளத்திற்கு வரும் வெள்ள நீரை வாய்க்காலில் திறந்துவிட்டதால் காங்கிரீட் போடுவதற்காக அமைக்கப் பட்டிருந்த தூண்கள்களை வெள்ளம் அடித்து சென்றது. இதனை தேடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications