நேபாளத்தில் கடும் பனிச்சரிவு.. சுற்றுலா சென்ற 7 தமிழர்கள் முக்திநாத் மலையில் சிக்கித் தவிப்பு
சென்னை: நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 7 பேர் சிக்கித் தவிக்கின்றனர்.
நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவமழை சீசன். இந்த பருவமழை காலத்தில் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.

கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து பல இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிய 54 பேர் பலியானதாகவும் பலரை காணவில்லை எனவும் நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு, பனிச்சரிவு ஏற்பட்டதால் 3 பெண்கள் உள்பட 7 பேர் மலையில் இருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
கடுமையான பனிச்சரிவு காரணமாக மலையில் இருந்து கீழே இறங்குவதற்கான பாதை இல்லாததால் அவர்கள் கடந்த நான்கு நாட்களாக மலையிலேயே உள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய தூதரகம் மூலம் நேபாள நாட்டு தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications