கும்பக்கரை அருவியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு.. 9வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கும்பக்கரை அருவியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தேனி:கும்பக்கரை அருவியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 9வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

இதன்காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அருவியில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடரும் வெள்ளப் பெருக்கால் 9வது நாளாக இன்றும் கும்பக்கரை அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு 9 வது நாளாக வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அணைப்பிள்ளையார் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடரும் வெள்ளப்பெருக்கு மற்றும் தடையால் கோடை விடுமுறையை கழிக்க செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications