எதிர்கட்சியினர் வாகனத்தை சோதனை போட்டதில் தவறில்லை - வைகோ
சட்டசபைக்கு வந்த எதிர்கட்சியினர் வாகனத்தை சோதனை செய்ததில் தவறேதும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை : நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளில் சட்டசபைக்கு வந்த எதிர்கட்சியினரின் வாகனத்தை சோதனை செய்ததில் தவறேதும் கிடையாது என்று கூறியுள்ள வைகோ, மோதல் ஏற்படுத்தும் நோக்கத்தில் எதிர்கட்சியின் அவைக்கு வந்தார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சட்டசபையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடந்த சம்பவங்கள் பற்றி கூறினார்.

தற்கொலை மிரட்டல்
இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் இதுவரை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புகளில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது கிடையாது என்று வைகோ கூறினார். சட்டசபையில் இருந்து எங்களை வெளியேற்றினால் தற்கொலை செய்து கொள்வோம் என்று ஸ்டாலின் மிரட்டியதாக நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் மிரட்டல்
கையில் பிளேடு வைத்திருக்கிறோம் என்றும் எங்களை வெளியேற்றினால் கைகளை அறுத்துக்கொள்வோம் என்று துரைமுருகன் மிரட்டியதாகவும் நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் வைகோ கூறினார்.

மோதல் ஏற்படுத்த வந்தார்களா?
சட்டசபைக்கு வந்த போது எதிர்கட்சியினரின் வாகனங்களை காவலர்கள் சோதனை செய்தனர். இது தவறேதும் இல்லை என்று கூறிய வைகோ, மோதல் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்கள் சட்டசபைக்குள் வந்தார்களா என்றும் வைகோ கேள்வி எழுப்பினார்.

வெளியேற்றியது ஏன்?
சட்டசபையில் அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர். இவர்கள் வெளியேறாமல் இருந்ததால் அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றச் சொன்னார் சபாநாயகர் தனபால். நாடாளுமன்றத்தில் தானும் ஒருமுறை வெளியேற்றப்பட்டிருக்கிறேன் என்றும் வைகோ கூறினார்.

ஜானகி ராமச்சந்திரன்
தொடர்ந்து பேசிய வைகோ, 1988ஆம் ஆண்டு ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக இருந்த போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் கலவரங்கள் வெடித்தன. கலவரம் செய்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்த உறுப்பினர்களை வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி ராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக அப்போதய சபாநாயகர் பி.எச். பாண்டியன் அறிவித்தார். ஆனால் சில தினங்களில் ஆளுநர் குரானா, தமிழக அரசை டிஸ்மிஸ் செய்தார் என்றும் வைகோ இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications