சாய்பாபாவுக்கு படைத்த பூக்கள் நிறம் மாறிய அதிசயம்.. நாகர்கோவிலில் பக்தர்கள் பரவசம்
நாகர்கோவில்: சாய்பாபா வழிபாட்டுக்காக பயன்படுத்திய மாலை நிறம் மாறியதால் அங்கு பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் அருகேயுள்ள, குலசேகரம், கூடை தூக்கி பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ணா கோவில் உள்ளது. இங்கு சாய்பாபாவுக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்கு உள்ள சாய்பாபாவுக்கு வியாழக்கிழமைதோறும் விசேஷ பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்களும் கலந்துகொண்டு ரோஜா மலர்களை தூவி சாய்பாபாவை வழிபடுவார்கள்.

இங்கு உள்ள சாய்பாபாவுக்கு மலர்கள் தூவி பக்தர்கள் வழிபட்டபோது ரோஜா மலர்கள் நிறம் மாறியது. சிவப்பு நிற ரோஜா மலர்கள் பூஜைக்கு பிறகு ஊதா, இளம்மஞ்சள் மற்றும் ரோஸ் நிறத்தில் மாறியது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இந்த செய்தி அப்பகுதி மக்களிடம் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் சாய்பாபா கோயிலுக்கு திரளாக வந்தனர். அங்கு சாய்பாபா சிலை மற்றும் சாய்பாபா உருவப்படத்தின் அருகே வைக்கப்பட்ட ரோஜா மலர்கள் நிறம் மாறி இருந்ததை பார்த்து பக்தர்களை பரவசம் அடைந்தனர். பூஜை செய்யப்பட்ட ரோஜா மலர்களை பக்தர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
அந்த மலர்களும் நிறம் மாறியதால் பக்தர்களிடையே பரபரப்பு நிலவுகிறது. இதுபற்றி பக்தர்கள் கூறும்போது ரோஜா மலர்கள் பூஜையின்போது நிறம் மாறுவது சாய் பாபாவின் அற்புதம் என்று கருதுவதாகவே தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications