ஊரே கூடி நெருப்பு மூட்டி கொண்டாடிய அரவிந்தர் பிறந்த நாள்.. புதுச்சேரியில்
புதுச்சேரி: மகான் அரவிந்தரின் பிறந்ததினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர் மக்கள் சேர்ந்து தீ மூட்டி தியானம் செய்தனர்
சர்வதேச நகரமான ஆரோவில்லில் நடைபெற்ற போன்பயர் நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லில் ஏராளமான வெளிநாட்டினர் தங்கியுள்ளனர். இன்று மகான் அரவிந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரோவில் மாத்திர் மந்திர் அருகில் அதிகாலை விறகுமூட்டி தீயிட்டு (போன்பயர்) தியான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தியானத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இந்திய மக்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழா அதிகாலை முழுக்க சிறப்பாக நடந்தது.
ஆண்டுதோறும் 2 முறை இந்த பான்பயர் நிகழ்ச்சி நடைபெறும். ஆரோவில் உதய தினம் மற்றும் அரவிந்தரின் பிறந்த தினத்தில் போன்பயர் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications