சிறுத்தை, புலி, மான்களுக்கு டிராக்டரில் வாட்டர் சப்ளை செய்யும் வனத்துறை
பொள்ளாச்சி: ஆனைமலை வனப்பகுதியில் டிராக்டரில் குடிநீர் வினியோகம் செய்து வனவிலங்குகள் தாகத்தை தணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதியில், வறட்சி நிலவி வரும் நிலையில், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக டிராக்டர் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, தொட்டிகளில் நிரப்பப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பல்வேறு உயிரினங்கள் காணப்படுகின்றன. இதில் 320 வகையான பறவைகள், யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, கடமான், புள்ளி மான், வரையாடு, சருகுமான், நீலகிரி மந்தி, சாம்பல்நிற மந்தி, புனுகுபூனை, தேவாங்கு, முதலை, நீர்நாய், ஆமை, ராஜநாகம், மலைப்பாம்பு என பல்வேறு வகை உயிரினங்கள் காணப்படுகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக மழைக்காலங்களில் வரும் நீரை சேமித்து வைக்கும் தடுப்பணைகள் மற்றும் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கோடை காலங்களில் தொட்டிகள் மற்றும் தடுப்பணைகள் நீரின்றி வறண்டு விடுகின்றன. தண்ணீரை தேடி வனவிலங்குகள் அணை மற்றும் தண்ணீர் உள்ள ஓடைகளை தேடி வர வேண்டிய நிலை காணப்படுகிறது.
வனத்தைவிட்டு, வெளியேறும் வனவிலங்குகள் நீரை தேடிச் செல்லும் போது, விளைநிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்குமிடையே மோதல் போக்கு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, வனப்பகுதியிலேயே நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், டாப்சிலிப் வனப்பகுதியில் வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகளில் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதைப் பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜீவ் கே ஸ்ரீவத்சவா மற்றும் பொள்ளாச்சி சரக மாவட்ட வன அலுவலர் வேலுச்சாமி அறிவுறுத்தலின்படி, வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்படுகிறது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது"என்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications