நகராட்சி தலைவரான திமுக முன்னாள் எம்எல்ஏ... உளுந்துர்பேட்டையில் போட்டியின்றி தேர்வு
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை நகராட்சி தலைவராக முன்னாள் எம்எல்ஏ போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் பிப்ரவரி 19ல் தேர்தல் நடந்தது. பிப்ரவரி 22ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் திமுக அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சியி்ல 952 வார்டுகள், நகராட்சிகளில் 2360 வார்டுகள், பேரூராட்சிகளில் 4388 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக, உள்பட பிற எதிர்க்கட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் பிற கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் தோல்வியடைந்தனர்.

மறைமுக தேர்வு
இதில் தேர்வான கவுன்சிலர்கள் மார்ச் 2ல் பதவியேற்று கொண்டனர். இன்று மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தல் நடந்து வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர் பேட்டை நகராட்சி தலைவராக திமுக முன்னாள் எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

திமுக கைப்பற்றிய நகராட்சி
உளுந்தூர்பேட்டை நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 18 வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள், மதிமுக கட்சிகள் தலா ஒரு வார்டுகளிலும் வென்றன. இதன்மூலம் திமுக தனித்து உளுந்தூர்பேட்டை நகராட்சியை கைப்பற்றியது. இந்த நகராட்சியின் 19வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசு முன்னாள் எம்எல்ஏ ஆவார்.

தலைவரான மாஜி எம்எல்ஏ
திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு நகராட்சி தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவருக்கு மற்ற கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

யார் இவர்
நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உளுந்தூர் பேட்டை சட்டசபை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இந்த தொகுதிக்கு 2006ல் நடந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் விஜயராகவனை வீழ்த்தி திமுக சார்பில் திருநாவுக்கரசு வெற்றி பெற்றிருந்தார். முன்னதாக 2001 சட்டசபை தேர்தலில் உளுந்தூர் பேட்டையி்ல் களமிறங்கிய திருநாவுக்கரசு அதிமுக வேட்பாளர் ராமுவிடம் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications