இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்! அப்துல் கலாமுடன் பணியாற்றியவர்!
மதுரை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து இன்று காலமானார். விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமான நிலையில் அவரது உடல் மதுரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பிறந்த சு.முத்து, ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். இவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 16) விஞ்ஞானி நெல்லை முத்து திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருவனந்தபுரத்தில் திடீர் உடல் நலக் குறைவால் காலமான நிலையில் அவரது உடல் மதுரையில் உள்ள அவரது மகள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.
நெல்லை முத்து, அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவரது 4 நூல்களுக்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட கவிமாமணி விருது பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications