தன்னை தோற்கடித்த வி.சி.சந்திரகுமாருக்காக ஈரோடு மேற்குக்கு மாறிய முத்துச்சாமி!
சென்னை: முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி முத்துச்சாமி. எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்ற முன்னாள் அமைச்சர். ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் ஒதுக்கப்பட்டதால் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார்.

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார். அத்தொகுதியில் அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். இதில் முத்துச்சாமி தோல்வியுற்றார், சந்திரகுமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்து மக்கள் தேமுதிகவை ஆரம்பித்துள்ள சந்திரகுமார் திமுக அணியில் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவரது கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதில் ஈரோடு கிழக்கில் சந்திரகுமார் மீண்டும் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து முத்துச்சாமி பவானி அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது சீட் மறுக்கப்படுவாரா என்ற பேச்சு நிலவி வந்தது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் அவர் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராக இடம் பெற்றுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications