ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால் ராஜீவ் ஆன்மா மன்னிக்காது: கொதிக்கும் யசோதா
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகையை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் மூத்த தலைவர் யசோதா தலைமையில் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால் ராஜீவ் காந்தியின் ஆன்மா கூட மன்னிக்காது என்று கொந்தளித்துள்ளார் யசோதா.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் வேட்பாளர் பட்டியலில் 33 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் இளங்கோவன் ஆதரவாளர்களாகவே இருந்தனர். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால், ப.சிதம்பரமும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் 2ம் வேட்பாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதிலும் இளங்கோவன் ஆதரவாளர்களே அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். பல தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான யசோதா விருப்பமனு அளித்திருந்தார். ஆனால் அந்த தொகுதி செல்வப்பெருந்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே இன்று சத்தியமூர்த்தி பவன் முன்பு யசோதா தலைமையில் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். ஈவிகேஸ் இளங்கோவனுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய யசோதா, தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை என்று கூறினார். அதே நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டால் ராஜீவ்காந்தியின் ஆன்மா மன்னிக்காது என்று கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்த செல்வப்பெருந்தகைக்கு வாய்ப்பு அளித்துள்ளனர். அவர் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலை செய்யப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தியவர் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியில் தலித்துகள், பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்கள் யசோதாவிற்கு எதிராக முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் இரண்டு கோஷ்டி தலைவர்களும் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரவக்குறிச்சி தொகுதியை கேட்டு வாங்காத ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக ஜோதிமணி போர்க்கொடி உயர்த்தினார். இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் கட்சித்தலைவர் யசோதாவும் இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications