25 புகார்களை முன்வைத்து 7 எம்.எல்.ஏக்களுடன் மாஜி முதல்வர் வைத்திலிங்கம் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி ரங்கசாமி அரசு மீது 25 புகார்களை முன்வைத்து முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான வைத்திலிங்கம் தலைமையில் 7 எம்.எல்.ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
சட்டசபை முன்பு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடங்கினர். உண்ணாவிரதம் குறித்து வைத்திலிங்கம் கூறுகையில், புதுசேரியில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி ஊழல் மற்றும் முதல்வர் நிவாரண நிதியில் ஊழல், துச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற 25 புகார்கள் குறித்து விசாரணை தேவை என்று கூறினார்.
இந்த விவகாரங்களில் புதுச்சேரி அரசின் போக்கைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications