திருமங்கலம் “ஃபார்முலா”.. மருதமலை படத்தில் வரும் ரகுவரனை நினைவிருக்கா- காலமான நரேஷ் குப்தா யார்?
சென்னை: தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ்நாடு தேர்தல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்திய நரேஷ் குப்தா யார்? அவர் ஆற்றிய பணிகள் என்ன விரிவாக காண்போம்.
தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நரேஷ் குப்தா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்து இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்துறை செயலாளராகவும், மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் செயலாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

குறிப்பாக இவர் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக 5 ஆண்டுகள் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறார். குறிப்பாக தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கியவர் என்று போற்றப்படுகிறார் நரேஷ் குப்தா. மக்கள் அனைவரிடம் எளிமையாக பழகும் தன்மை கொண்டவரான இவர், காந்தியவாதியாக அறியப்படுகிறார்.
இன்று வரை ஒவ்வொரு தேர்தல்களின்போதும் பேசப்படும் திருமங்கலம் ஃபார்முலா என்று அழைக்கப்படும் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் காலத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையராக பணிபுரிந்தவர் நரேஷ் குப்தா. திருமங்கலம் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா நிகழ்வுக்கு பிறகு தமிழ்நாடு தேர்தல்களில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டவர்.

குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்த நரேஷ் குப்தா, 2 முதலமைச்சர்களுடன் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வந்தார். தேர்தல் கட்டுப்பாட்டு காலங்களில் மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிட மாற்றம் செய்யும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் நரேஷ் குப்தாதான்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக நடித்து இருக்கும் ரகுவரனின் கதாப்பாத்திரம், நரேஷ் குப்தாவை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டது. இப்படி தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தலைமை தேர்தல் அதிகாரியாக திகழ்ந்தவர் நரேஷ் குப்தா. இந்த நிலையில் இதய பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நரேஷ் குப்தா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும் காந்தியப் பற்றாளருமான திரு. நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ் (ஓய்வு) அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். உள்துறைச் செயலாளர், மாநிலத் திட்டக் குழுவின் உறுப்பினர்-செயலாளர் எனப் பல உயர் பொறுப்புகளில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விளங்கியவர் திரு. நரேஷ் குப்தா அவர்கள். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு இருக்கும் இரங்கல் பதிவில், "மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரு நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications