எம்.ஜி.ஆர் மருமகன் விஜயன் கொலை வழக்கு: 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு
சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மருமகன் விஜயன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவரது கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். இவர், கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காரை வழிமறித்து விஜயனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது.

இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையின்போது, விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் இந்த கூலிப்படையை அமர்த்தி கொலைக்கு உதவி செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பானு, போலீஸ்காரர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தேடப் பட்ட பள்ளி ஆசிரியை புவனா வெளிநாட்டுக்கு தப்பியதால், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் மொத்தம் 119 சாட்சி ஆவணங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 79 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில், போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வழக் கறிஞர் விஜயராஜ் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கின் இறுதிகட்ட வாதம் நிறைவடைந்ததையடுத்து வரும் ஜூலை 13ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டார்.
விஜயன் கொலை வழக்கின் தீர்ப்பினை இன்று (புதன்கிழமை) பிற்பகல் வாசித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு 7 பேரும் தலா 10000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்றும் அபராதம் கட்டத் தவறினால் 6 மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 8 ஆண்டாக நடந்த வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications