பாமக நிறுவனரா? நிறுவனத் தலைவரா? குழப்பத்தை ஏற்படுத்திய டாக்டர் ராமதாஸின் சித்திரை திருநாள் வாழ்த்து!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மட்டுமல்ல.. இனி தலைவரும் நானே.. அதாவது நிறுவனத் தலைவர் நானே என அறிவித்தவர் டாக்டர் ராமதாஸ். பாமகவின் தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணி ராமதாஸை டிஸ்மிஸ் செய்துவிட்டு நானே தலைவர் என டாக்டர் ராமதாஸ் அறிவித்தது அக்கட்சியில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. ஆனால் இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி லெட்டர் பேடில் வெறும் 'நிறுவனர்' என்று மட்டுமே இடம் பெற்றிருந்தது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி: தமிழர்கள் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருக்கும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்திரை மாதம் திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் மாதம் ஆகும். காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரைத் திருநாள் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாகும்.
சித்திரைத் திருநாள் என்றாலே மக்கள் பொது இடங்களில் கூடி மகிழ்வதும், கொண்டாடுவதும் தான். அதிலும் குறிப்பாக சித்திரை முழுநிலவு நாம் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும்; நமது வெற்றியை மட்டுமே பறைசாற்றும். வழக்கம் போலவே இந்த சித்திரையும் நம் வாழ்வில் மகிழ்ச்சியை நிறைக்கும்.
சங்கக் காலத்தைப் போலவே நிகழ்காலத்திலும் தமிழர்கள் வாழ்க்கை திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றால் நிறைக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக தமிழர்களின் தொழில்கள் சிறக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் நிறுவனரும் தலைவரும் நானே டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்; பாமகவின் தலைவராக இருந்த அன்புமணியை டிஸ்மிஸ் செய்துவிட்டு அவரை செயல் தலைவர் என பதவி இறக்கம் செய்தார். இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு தமிழக அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வெறும் நிறுவனர் ராமதாஸ் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் குழப்பத்தை உருவாக்கிவிட்டுள்ளது.\
-
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications