Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சோக செவ்வாய்... பரங்கிமலையில் ரயிலிலிருந்து விழுந்து பள்ளி மாணவர் உட்பட 4 பேர் பலி

சென்னை பரங்கிமலையில் ரயில் படியில் தொங்கி சென்றபோது கீழே விழுந்து 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் ரயில் மின்கம்பி விழுந்து 7 பேர் காயம், இருவர் பலி!

    சென்னை: பரங்கிமலையில் ரயில் படியில் தொங்கி சென்றபோது கீழே விழுந்து பள்ளி மாணவர் உட்பட 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டநெரிசல் காரணமாக படியில் தொங்கியவாறு பயணம் செய்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

    சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்கம்பி அந்ததால் கடற்கரை- திருமால்பூர் இடையேயான ரயில் சேவை தாமதமானதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து விரைவு ரயில்கள் செல்லும் பாதையில் லோக்கல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ரயில்கள் தாமதத்தால் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் இருந்துள்ளது.

    படியில் பயணம்

    படியில் பயணம்

    இதன் காரணமாக தாமதமாக வந்த கடற்கரை - திருமால்பூர் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் ரயில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துள்ளனர்.

    4 பேர் பலி

    4 பேர் பலி

    ரயில் பரங்கி மலை ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டபோது படியில் தொங்கியவர்கள் பக்கவாட்டு சுவரில் மோதியுள்ளனர். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பள்ளி மாணவர் பலி

    பள்ளி மாணவர் பலி

    பலியானவர்கள் சங்கர், சிவக்குமார், பரத், பிரவீன் என்பது தெரியவந்துள்ளது. இதில் பரத் பள்ளி மாணவர் என்பதும் ஜெய்கோபால் கரோடியா பள்ளி மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    தலைகள் துண்டானது

    தலைகள் துண்டானது

    பிரவீன் குமார் கல்லூரி மாணவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த 4 பேரில் 2 பேரின் தலைகள் துண்டாதாக கூறப்படுகிறது.

    கால்கள் துண்டானது

    கால்கள் துண்டானது

    காயமடைந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில் குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூர்த்தி என்பவருக்கு 2 கால்களும் துண்டானது. கூட்ட நெரிசல் காரணமாக படியில் பயணம் செய்தபோது நடைமேடை பக்கவாட்டு சுவரில் அடிபட்டு இந்த கோர விபத்தி நிகழ்ந்துள்ளது. மேலும் பலரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    விரைவு ரயில் ட்ராக்

    விரைவு ரயில் ட்ராக்

    விரைவு ரயில்கள் இயக்கப்படும் ட்ராக்கில் கூட்டல் நெரிசல் மிகுந்த லோக்கல் ட்ரெயின்கள் இயக்கப்பட்டதே 4 உயிர்கள் பறிபோக காரணம் என சக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    நேற்றிரவு 2 பேர் பலி

    நேற்றிரவு 2 பேர் பலி

    நேற்றிரவும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர். இதனிடையே சம்பட இடத்திற்கு நேரில் ஆய்வு செய்த ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு விபத்திற்கு காரணமான ரயில் நிலைய பக்கவாட்டு சுவரை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+