கோவையில் பயங்கரம்.. ஊருக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி சிறுமி உட்பட 4 பேர் சாவு
கோவை: கோவை புறநகர் பகுதிகளில் காட்டு யானை தாக்கி மொத்தம் நான்கு பேர் உயிரிழந்ததுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை- கணேசபுரத்தை சேர்ந்த விஜயகுமார், தங்கமணி ஆகியோரின் மகள் காயத்ரி (12). நேற்று இரவு, வீட்டின் வெளியே தந்தையுடன் இவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று, விஜயகுமாரையும், காயத்ரியையும் தூக்கி வீசியது. இதில் விஜயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலில் காயத்ரி அந்த இடத்திலேயே இறந்தார்.
இதேபோல போத்தனூர் அருகே கணேசபுரத்தில் யானை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.ஏற்கனவே யானை தாக்கியதில் கணேசபுரத்தை சேர்ந்த நாகரத்தினமும் யானை தாக்குதலில் உயிரிழந்தார். கோவை பகுதியில் மொத்தம் 4 பேர் யானை தாக்குதலால் உயிரிழந்துள்ள நிலையில், வனத்துறையினர் அந்த யானையை பிடிக்க குழுமியுள்ளனர்.
வெள்ளளூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications