மனைவியை அக்கா என்று கூறி.. இப்படி ஒரு கேவலமான ஜோடியை எங்குமே பார்த்திருக்க முடியாது!
திருச்சி: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் ஜோடி போலீஸில் சிக்கியுள்ளது. இவர்கள் செய்துள்ள வேலைகளைப் பார்த்தால் தலை சுற்றி மயக்கமே வந்து விடும். அந்த அளவுக்கு படு கேவலமாக நடந்துள்ளனர் இவர்கள்.
திருச்சி மாவட்டம் நாவல்பட்டு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். அவரைத் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில அந்த மாணவி திடீரென நாவல்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழுதபடி வந்தார். தன்னை ஒரு வாலிபர் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகவும், தன்னை பலாத்காரம் செய்து விட்டு 2 பவுன் நகையைப் பறித்துச் சென்று விட்டதாகவும் கூறினார்.
அவருடன் ஒரு பெண் வந்ததாகவும், அப்பெண்ணை அந்த நபர் அக்கா என்று கூறியதாகவும் அந்த மாணவி கூறினார். இதையடுத்து போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அந்த இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவரும் நேற்று திருச்சி போலீஸாரிடம் சிக்கினர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது வெளியான தகவல்களைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியாகி விட்டனர். அந்த நபர் கொடுத்த வாக்குமூலம் இதுதான்:

திருப்பூர் தீனதயாளன்
அந்த வாலிபரின் பெயர் குரு தீனதயாளன். 27 வயதாகிறது. பட்டப்படிப்பு முடித்தவர். திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். வேலை இல்லாமல் சுற்றி வந்தார். இந்த நிலையில் பேஸ்புக்கில் சற்று கவனத்தைத் திருப்பினார்.

சென்னை பிரியதர்ஷினி
பேஸ்புக் மூலமாக அவருக்கு அறிமுகமானார் சென்னையைச் சேர்ந்த பிரியதர்ஷினி. 25 வயதான அவரை காதலித்த தீனதயாளன் திருமணமும் செய்து கொண்டார். ஆனால் கையில் செலவுக்குப் பணம் இல்லாமல் இருவரும் கஷ்டப்பட்டனர்.

குறுக்குப் புத்தி
இந்த நிலையில் இருவருக்கும் குறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. பேஸ்புக் மூலமாக இளம் பெண்களுக்கு வலை வீசுவது, வலையில் விழும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக உறுதி அளிப்பது. அவர்களை தனி இடத்திற்கு வரவழைத்து முதலில் அவர்களை அனுபவிப்பது, அதன் பிறகு அவர்களிடமிருந்து நகை, பணத்தைப் பறித்துக் கொள்வது.. இதுதான் குரு தீனதயாளன் கொடுத்த திட்டம். இதற்கு ஓகே சொன்னார் பிரியதர்ஷினி.

அக்கவாக மாறிய மனைவி
இதையடுத்து பெண்களுக்கு வலை வீச ஆரம்பித்தார் தீனதயாளன். அதில் சிலர் சிக்கினர். அவர்களை எங்காவது ஒரு கோவிலுக்கு வரவழைப்பார்கள். வரும் பெண்ணிடம், இது என் அக்கா என்று கூறி தனது மனைவியை அறிமுகப்படுத்துவாராம். அக்காவுக்கு ஓ.கே என்றால் எனக்கும் சம்மதம் என்பாராம். வரும் பெண்ணைப் பார்த்து பிரியதர்ஷினி சம்ம்தம் என்று தெரிவித்ததும், அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் அல்லது கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விடுவாராம். பிறகு அவரது நகை, பணத்துடன் தப்பி விடுவாராம்.

குறி வைத்து பிடித்தனர்
கல்லூரி மாணவிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வரும் பெண்கள், காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்தவர்கள் என தெளிவாக குறி வைத்து வேட்டையாடியுள்ளனர் தீனதயாளனும், அவரது மனைவியும்.
போலீஸார் இருவரையும் தற்போது கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications