பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்தியா முழுவதும் “இலவச ரோமிங்”- மீண்டும் அறிமுகம்
சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்தியா முழுவதும் இலவச ரோமிங் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
2013 இல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இடையில் நிறுத்தப்பட்ட "ஸ்பெஷல் டேரிப் வவுச்சர்" தற்போது நவம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இலவச ரோமிங் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்தும் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்புகள் இலவசமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக 7 நாட்களுக்கு ரூபாய் 33 க்கு ஸ்பெஷல் டேரிப் வவுச்சர் ரீசார்ஜ் செய்ய வேண்டும். வெளிமாநிலம் செல்பவர்கள் இந்த வவுச்சரை பயன்படுத்தினால் அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எந்த மாநிலத்திற்கு சென்றாலும் ரோமிங் கட்டணம் முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் வெளிமாநிலத்தில் இருந்து தொடர்பு கொண்டு பேசுவதற்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு ரூபாய் ஐந்து பைசா வசூலிக்கப்படும்.
இது குறித்து பி.எஸ்.என்.எல். இயக்குனர் அனுபம் ஸ்ரீவத்சவா கூறுகையில், தேசிய அளவிலான இலவச ரோமிங் வசதி அனைத்து பி.எஸ்.என்.எல்., ஜி.எஸ்.எம். செல்போன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ஸ்பெஷல் டேரிப் வவுச்சர்கள் 90 நாட்கள் வரை கிடைக்கும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications