பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் இலவசம்: ராமதாஸ் அறிவிப்பு
புதுவை: பாமக ஆட்சிக்கு வந்தால் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உப்பு வேலூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாச் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

பெண்கள் கூட்டம்:
இந்த கூட்டத்தில் அதிக அளவில் பெண்கள் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டை சீரழித்தக் கட்சிகள்...
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே தமிழகத்தில் அதிக அளவில் மதுக்கடைகளை திறந்து தமிழ்நாட்டையே குடிகார நாடாக்கிவிட்டது. தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க மக்கள் பா.ம.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

ஓட்டுக்குப் பணம் கூடாது...
தேர்தலின்போது யாரும் பணத்துக்காக வாக்களிக்க கூடாது.

டிராக்டர் இலவசம்...
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மற்றும் ஒரு கிராமத்துக்கு ஒரு டிராக்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

மின்வெட்டு...
தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று வருகிறார்கள்.

அரசு வேலைவாய்ப்பு...
கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கூலிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்கிறார்கள். ஆகையால் தமிழக அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

மாற்றம் வேண்டும்....
திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.

பெண்கள் நினைத்தால்...
பெண்கள் சக்தி படைத்தவர்கள். பெண்கள் நினைத்தால் தமிழகத்தில் மாற்றம் வரும்' என இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications