சென்னை சுடுகாட்டில் இலவச வைஃபை.. இறுதிச் சடங்கை இனி நேரலையாக பார்க்கலாம் !
சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானத்தில் இலவச வைஃபை ஏற்படுத்தப்பட்டுள்ளது
சென்னை: சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானத்தில் இலவச வைஃபை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கு வர முடியாதவர்களுக்கு இணையத்தின் மூலம் நேரலையில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 38 மயானங்கள் உள்ளன. இங்கு இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்கு ரூ. 250, தகனம் செய்வதற்கு ரூ. 650 (விறகு, வறட்டிக்கு தனி கட்டணம்), மின்சார மயானத்தில் தகனம் செய்ய ரூ. 250 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த கட்டணம் வசூலிப்பதில் மயான பொறுப்பாளர்கள் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அதிக கட்டணம் கேட்டு இறந்தவர்களின் உறவினர்களை நிர்ப்பந்திப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி மயானங்களில் உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் இலவசம் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள மின் மயானங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தது சென்னை மாநகராட்சி. இதன் அடிப்படையில் சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானம் ஐ.சி.ஓ.டபுள்யூ என்ற என்ஜிஓ-விடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திடம் ஒப்படைத்த பின்னர் பல்வேறு அடிப்படை வசதிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதன் முறையாக சுடுகாட்டில் வைஃபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது அந்த நிறுவனம். அதன்படி வரும் 15-ம் தேதி முதல் வைஃபை வசதி அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து ஐ.சி.ஓ.டபுள்யூ நிர்வாகம் கூறுகையில், இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கு வர முடியாதவர்களுக்கு இணையத்தின் மூலம் நேரலையில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications