ராமேஸ்வரத்தில் வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம்: மூவர் கைது
ராமேஸ்வரம்: வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 ராமேஸ்வரம் வாலிபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் அருகே வில்லூண்டி தீர்த்தம் எனும் கடற்கரை பகுதி உள்ளது. ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.
நேற்று மாலை இந்த கடல் பகுதிக்கு, தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் அமெரிக்காவை சேர்ந்த லாராடேனிஸ் தனது நண்பரான பிரான்ஸ்ஸை சேர்ந்த ஜார்ஜ்மெய்லியுடன் வந்துள்ளார்.
அமைதியான கடலின் அழகினை ரசித்த லாராடேனிஸ், முகத்தில் சுவாச கருவியினை பொறுத்தி கொண்டு கடலில் நீச்சல் அடித்து கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, அந்த பகுதிக்கு வந்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த யாகப்பா, லியோன், ஆக்னால்ட் ஆகிய 3 இளைஞர்களும் கடலில் நீந்தி கொண்டிருந்த லாராடேனியலின் அருகில் சென்று கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த லாராடேனியல் கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த ஜார்ஜ்மெய்லி, சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்களிடம் இருந்து லாராடேனியலை மீட்டுள்ளார். பின்னர், இந்த சம்பவம் குறித்து புகார் செய்ய இருவரும் தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த போலீசார் புகாரை வாங்காமல் வெளிநாட்டு பயணிகள் இருவரையும் அனுப்பி உள்ளனர்.
அதன்பின், ராமேஸ்வரத்தில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்ய வந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீண்டும் தஙக்ச்சிமடம் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு பின் புகாரை பெற்று கொண்ட தங்கச்சிமடம் போலீசார், லாராடேனியலிடம் சில்மிஷத்தில் ஈடுபடட் மூவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளான வெளிநாட்டினரின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய போலீசார், அவர்களை 3 மணி நேரத்திற்கு மேலாக காவல் நிலையத்திலேயே அமர வைத்து புகாரினை வாபஸ் பெறுமாறு போலீசார் கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்து செய்தியாளர்கள் தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு இருந்த போலீசார் சரியான தகவல் தெரிவிக்காததால் செய்தியாளர்கள் இதை டி.எஸ்.பி. விஜயகுமாரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன்பின் ஒருவழியாக வெளிநாட்டினரின் புகாரின்பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 நபர்கள் மீதும் போலீசார் வேறு வழி இல்லாமல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications