ஜெ. பற்றி அவதூறு பேச்சு: காடுவெட்டி குரு மீது போலீசில் புகார்

இதையடுத்து இன்று புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் டி.ஜி.பி. காமராஜை சந்தித்து காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. மீது புகார் மனு கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
செவ்வாய்கிழமையன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் அனந்தராமன் தலைமையில் கடலூர் சாலை, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவராக உள்ள காடுவெட்டி குரு பேசும்போது தமிழக முதல்வர் பற்றி அவதூறான வார்த்தைகளை பத்திரிக்கையில் பிரசுரிக்க முடியாத வார்த்தைகளை ஒருமையில் பேசியதோடு, ஜாதிய ரீதியில் வன்முறையை தூண்டும் விதமாக பேசினார்.
அரசியலமைப்பு சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான முறையில் அச்சட்டத்தை அவமதிக்கும் விதத்தில் பேசினார். அச்சட்டத்தின் மூலம் பயன் பெறுகிற தாழ்த்தப்பட்ட மக்களை ஜாதிய ரீதியாக தவறாக பேசி அம்மக்களை இழிவுபடுத்தி உள்ளார்.
தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் விதத்தில் இவர் பேசியதால் இவர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் சுட்டிக்காட்டி ஆணவத்துடன் பேசியுள்ளார்.
அமைதியான புதுச்சேரியில், குறிப்பிட்ட சாதியை கேவலப்படுத்தியும், இடஒதுக்கீடு அடிப்படையில் பயன் பெறுகின்ற தாழ்த்தப்பட்டவர்களை கேவலப்படுத்தியும் பேசி இங்கு மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார்.
அவருடைய ஆபாசம் கலந்த வன்முறையான பேச்சை தனியார் கேபிள் டி.வி. நிறுவனம் சட்டத்திற்கு விரோதமாக நேரடி ஒளிபரப்பாக ஒலிபரப்பு செய்ததால் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக முதல்வர் அவர்களைப் பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும், அவதூறாக பேசியும், தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி சாதி ரீதியில் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசிய காடுவெட்டி குருவையும், இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தலைமை ஏற்றவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications