ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினர்.. துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்திய முதல்வர்
தூத்துக்குடி படுகொலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி படுகொலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி கூறியுள்ளார்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

சமூக விரோதிகள்
தற்போது தூத்துக்குடி படுகொலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி கூறியுள்ளார்.இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் போராட்டங்கள் அமைதியாக நடந்தன.ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது.

144 தடையுத்தரவு
சில விஷமிகளும், சில அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தை மீறி நடத்தியுள்ளனர். மக்கள் முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். 144 தடையுத்தரவு இருக்கும்போது ஸ்டாலின் தூத்துக்குடி சென்றது தவறு. வேண்டுமென்றே திட்டமிட்டே போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வன்முறை நடந்துள்ளது.

வருத்தமான செயல்
முதலில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடியும்தான் நடத்தினர்.மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர் வன்முறையாளர்கள். இதனால் பிரச்சனை உருவானது. மோசமான சூழல் நிலவும்போது இப்படிப்பட்டநிகழ்வு நடந்துவிட்டது என்பது வருத்தமான செயல்.

திட்டமிட்ட செயல் இல்லை
துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல் கிடையாது.தற்காப்புக்காக போலீசார் சுட்டிருப்பார்கள். உங்களை ஒருவர் தாக்கினால் நீங்கள் திருப்பி தாக்குவீர்கள். அப்படித்தான் அங்கும் நடந்துள்ளது.உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீீசார் சுடவில்லை. அந்த சூழ்நிலையில் நடந்த சம்பவம் இது, என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications