"நாடு முழுக்க துறைமுகங்கள் முடங்கும்.." ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.. பரபர அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

துறைமுக தொழிலாளர்கள் வரும் ஆக. 28ம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதிய ஒப்பந்தம், போனஸ் உள்ளிட்ட விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்காமல் கப்பல் துறை அமைச்சகம் இழுத்தடித்து வருவதால் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாகத் துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியா என்று இல்லை.. எந்தவொரு நாடாக இருந்தாலும் துறைமுகங்கள் ரொம்பவே முக்கியம். சர்வதேச அளவிலான சரக்கு போக்குவரத்து பெரும்பாலும் கடல் வழியாகவே நடக்கும் என்பதால் துறைமுகம் முக்கியமானதாக இருக்கிறது.

From August 28 Port workers to go on strike demanding Wage increase agreement

இதற்கிடையே அந்த துறைமுகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வரும் ஆக. 28ம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தம்: கடந்த 2 நாட்களாகத் தூத்துக்குடியில் துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கப்பல் துறை அமைச்சகம் தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சம்மேளனங்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், போனஸ் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகும் அதை நிர்வாகம் அமல்படுத்தாமல் மெத்தனப் போக்கு கடைப்பிடித்து வருவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதை எல்லாம் கண்டித்துத் தான் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் அனைத்து பெரிய துறைமுகங்களிலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன்: சம்பள உயர்வு மற்றும் இதர கோரிக்கைகள் வலியுறுத்திக் கடந்த 2021 செப். மாதமே நிர்வாகத்திடம் முறையிடப்பட்டதாகவும் 2022 முதல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வர வேண்டிய நிலையில், இப்போது வரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் துறைமுக தொழிலாளர் சம்மேளனங்களின் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் 7 முறை ஊதிய உயர்வு ஒப்பந்த கமிட்டி கூட்டம் நடைபெற்ற போதிலும் கப்பல் துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்காமல் இழுத்தடித்து வருவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதன் காரணமாகவே ஆக.28 முதல் போராட்டத்தை அறிவித்துள்ளதாகவும் இதில் நாடு முழுக்க சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

முடங்கும் அபாயம்: இதனால் துறைமுக பணிகள் முடங்கும் அபாயம் இருப்பதற்கான அதற்குள் மத்திய கப்பல் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+