சென்னையில் நாளை முதல் மதுபான பார்கள் திறப்பு? குடிமகன்கள் குஷி
சென்னையில் நாளை மதுபான பார்கள் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் குடிமகன்கள் மிகவும் குஷியாக உள்ளனர்.
சென்னை: நெடுஞ்சாலை ஓரம் மதுபான விடுதி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்த நிலையில் நாளை முதல் சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் பார்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏராளமான விபத்துகள் ஏற்படுவதாக கூறி நெடுஞ்சாலைக்குள் 500 மீட்டருக்குள் டாஸ்மாக் கடைகளும், மதுபான விடுதிகளும் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 500 மீட்டருக்குள்பட்ட 3000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் நகர எல்லைக்குள் மதுபான பார்கள் செயல்பட எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது. இந்த விளக்கத்தை தொடர்ந்து நாளை முதல் சென்னையில் பார்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அவ்வாறு திறக்கும் பட்சத்தில் சென்னை காஸ்மோபாலிட்டன், ஜிம்கானா, எம்ஆர்சி ஆகிய கிளப்புகளில் திறக்கப்படலாம். அதேபோல் மேரியாட்,ஹயாத், ரெயின்ட்ரீ, தி பார்க், பார்க் ஹயத், லீ மெரீடியன், ஜிஆர்டி, ஹில்டன் போன்ற ஹோட்டல்களிலும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பார்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications