தென்னந்தோப்பு சின்னத்தில் தமாகா போட்டியிடும்- ஜி.கே.வாசன் அறிவிப்பு
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸுக்கு சட்டசபைத் தேர்தலில் 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமாகவின் நிலைப்பாடு குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அதை ஜி.கே.வாசனும் இதுவரை தெளிவுபடுத்தாமல் இருந்து வருகிறார்.

திமுகவுடன் சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்த்து விட்டது. சரி அதிமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக அடிமாட்டு ரேஞ்சுக்கு தமாகாவை மதிப்பதால் வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

மறுபக்கம் மக்கள் நலக் கூட்டணி தங்களது கூட்டணிக்கு வாசனை தொடர்ந்து அழைத்து வருகிறது. அதற்கு பதில் சொல்லாமல் இருந்து வருகிறார் வாசன்.
கடைசியாக வந்த தகவல்களின்படி காங்கிரஸுக்கும், தமாகாவுக்கும் தலா 25 தொகுதிகள் தர திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லையாம். இதனால்தான் பேச்சுவார்த்தையில் இழுபறி என்கிறார்கள்.

மறுபக்கம் அதிமுக அதிகபட்சமாக 9 சீட் வரைதான் தருவதாக கூறியுள்ளதாம். அதுவும் கூட இரட்டை இலையில் நிற்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார்களாம். இது வாசனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். அதேசமயம் மாவட்டத்துக்கு ஒரு சீட் வீதம் 32 சீட் தர வேண்டும் என்று தமாகா கோரிக்கை வைத்துள்ளதாம்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் வாசன். அப்போது அவர் கூறுகையில், தமாகா கட்சிக்கு தெனந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு தென்னை மரங்கள் இந்த சின்னத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த சின்னத்தில்தான் சட்டசபைத் தேர்தலில் தமாகா போட்டியிடும். இந்த சின்னம் கட்சியின் கொடியில் இடம் பெறாது. மாறாக பெருந்தலைவர் காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோரது படங்கள் மட்டுமே கட்சிக் கொடியில் இடம் பெறும்.

ஏப்ரல் 2ம் தேதி முதல் தென்னந்தோப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தும் பிரசாரம் தொடங்கும் என்றார் வாசன்.
பேட்டியின்போது கட்சியின் சின்னத்தை ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினர். அப்போது போடுங்கம்மா ஓட்டு தென்னந்தோப்பு சின்னத்தைப் பார்த்து என்று கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டனர். அவர்களின் கோஷத்தைப் பின்னர் தடுத்து நிறுத்திய ஜி.கே.வாசன். போதும் போதும், இனிமேல் தொகுதியில் போய் வச்சுக்கோங்க என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications