கல்லூரி மாணவ- மாணவிகளுக்காக களம் குதிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி 10 அம்ச கோரிக்கைகளாக வலியுறுத்தி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கரூர் தான்தோன்றிமலை பகுதி பொறுப்பாளர் இல்ல புதுமனை புகுவிழாவில் பங்கேற்ற தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

G.K.Vasan announced protest for college students…

அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் உறுப்பினர்களின் கருத்துக்கலுக்கும் கோரிக்கைகளுக்கும் வாய்ப்பளித்து பாராளுமன்ற கூட்டத்தொடரின் நேரம் வீனடிக்கப்படாமல் பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்ற அவர் விவசாய நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்துவது தொடர்பாக கொண்டு வந்த அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றார்.

G.K.Vasan announced protest for college students…

ஏனெனில் நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பேசும் போது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி 10 அம்ச கோரிக்கைகளாக வலியுறுத்தி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

மேலும் குடியரசுத்தலைவர் உரை ஏமாற்றமளிப்பதாகவும், இந்த உரையில் புதிய தொழில் தொடங்க எந்த வொரு நல்ல அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. நல்ல அறிவிப்பு வரவில்லை என்றார்.

மேலும் சின்னதாதம்பாளையம் ஏரிக்கு அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், தமிழ் மாநில காங்கிரஸ் முக்கிய நிர்வாகியுமான நாட்ராயன், த.மா.கா நிர்வாகிகள் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+