உயிர் காக்கும் மருந்துகளுக்கான வரிச்சலுகையை ரத்து செய்வதா? - மத்திய அரசுக்கு வாசன் கண்டனம்
சென்னை: உயிர் காக்கும் 76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் அதிக அளவு மருந்துகள் தயாரிக்கப்பட்டாலும் எச்.ஐ.வி., புற்றுநோய், ரத்தக்கசிவு போன்ற பல்வேறு நோய்களுக்கான உயிர் காக்கும் மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்யுள்ளது.

இச்சூழலில் 76 வகை உயிர் காக்கும் மருந்துக்களுக்கான இறக்குமதி வரிச்சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இம்மருந்துகளின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்கள் இதனால் மேலும் பாதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு ஒருபக்கம் அனைவருக்கும் சுகாதார திட்டம் என அறிவிக்கிறது. மறுபக்கம் உயிர் காக்கும் மருந்துகளுக்கான வரிச்சலுகையை ரத்து செய்கிறது. பொதுமக்களை ஏமாற்றும் இதுபோன்ற செயல் கண்டனத்துக்குரியது.
உயிர் காக்கும் மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். அதுவரை இம்மருந்துகளுக்கான இறக்குமதி வரிச்சலுகையை தொடர வேண்டும். 76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications