தவ வாழ்வு வாழும் ஜெ.வுக்கு கொடநாடு எஸ்டேட் எதற்கு?: ஜி. ராமகிருஷ்ணன்
திருவண்ணாமலை: தவ வாழ்வு வாழ்வதாக மேடைதோறும் கூறி வரும் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்கள் எதற்கு? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வனை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

அரசியல்
அரசியல் ஒன்றும் வியாபாரம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வது தான் அரசியல். அதிமுக ஆட்சியில் நடத்துனர் பணி முதல் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி வரை பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

ஊழல்
அதிமுகவின் ஊழல் ஆட்சிக்கு மாற்று வேண்டும். ஆனால் அந்த மாற்று திமுக கிடையாது. ஊழல் விஷயத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

ஜெயலலிதா
தவ வாழ்வு வாழ்வதாக மேடைதோறும் கூறி வரும் ஜெயலலிதாவுக்கு கொடநாட்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்கள் எதற்கு? மதுரையில் 22 ஆண்டுகளாக நடந்த கிரானைட் ஊழலில் அதிமுக, திமுகவுக்கு தொடர்பு இருக்கிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக் கடைகளால் தமிழ் மக்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். மது ஆலைகளை நடத்தும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் மதுவிலக்கை கொண்டு வர முடியாது. மதுவிலக்கு குறித்து அவர்களுக்கு இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. ஆனால் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூடுவோம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications