கெயில் நிறுவனம் விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சரத்குமார் வரவேற்பு
சென்னை: கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட கொங்கு மண்டலத்தில் தமிழக விவசாயிகளின் வேண்டுகோளை மதிக்காமல் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியை தொடங்கியது. தமிழக விவசாயிகள் மீது அன்பும், அக்கறையும் கொண்ட முதல்-அமைச்சர், கெயில் நிறுவனத்தின் நடவடிக்கைக்களுக்கு தடை விதித்து, விவசாயிகளின் கோரிக்கைகளை செயல்படுத்தினார்.
தமிழக அரசின் முடிவுக்கு கெயில் நிறுவனம் தடைபெற்று பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை மகிழ்வுடன் வரவேற்கிறேன். கெயில் நிறுவனம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் நெடுஞ்சாலைகள் வழியே குழாய்களை பதித்திட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications