பழனி: கத்தி முனையில் கணவன்- மனைவியை கட்டி போட்டு 100 பவுன் நகைக் கொள்ளை
பழனி: பழனி அருகே நிதிநிறுவன அதிபரையும், அவருடைய மனைவியையும் கத்தி முனையில் கட்டி போட்டு வீட்டில் இருந்து நூறு சவரன் தங்க நகைகளையும், ரூ.35ஆயிரம் பணத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
பழனி அருகே உள்ள சாலையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது44). தி.மு.க. பிரமுகரான இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கார்த்திகேயனின் வீடு அரண்மனை தோட்டம் என்ற இடத்தில் உள்ளது.
குழந்தைகள் இருவரும் கோடை விடுமுறையை யட்டி கீதம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டனர். திங்கட்கிழமை இரவு ககார்த்திகேயன் மனைவி இந்திராவுடன் வீட்டில் இருந்தார் அப்போது வீட்டிற்கு வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டினர்.
பின்னர் கணவன்-மனைவி இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.பின்னர் கார்த்திகேயன் காரை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனர். பின்னர் காரை பழனி பஸ் நிலையம் அருகே நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
கணவன்- மனைவி இருவரும் நீண்ட நேரத்துக்கு பின் கட்டுகளை அவிழ்த்து சம்பவம் குறித்து பழனி தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications