பொத்தேரியில் கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் கஞ்சா! கைதான 11 பேர் சொந்த ஜாமினில் விடுவிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து நேற்று காலையிலேயே போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 11 மாணவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்துள்ளது.
சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநில மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியின் விடுதி மற்றும் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, 500 -க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று அதிகாலை 3 மணிக்கே அங்கு குவிந்தனர். 3 துணை கமிஷனர்கள், 2 கூடுதல் துணை கமிஷனர்கள், 19 உதவி கமிஷனர்கள், 50 இன்ஸ்பெக்டர்கள் என ஒட்டு மொத்தமாக களம் இறங்கிய போலீசார், மாணவர் தங்கியிருந்த வீடுகளை குறிவைத்து சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் பயன்படுத்திய சூட்கேஸ் மற்றும் பைகள் உள்ளிட்ட உடமைகளை போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் குவியல் குவியலாக பிடிபட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தனி பைகளில் போட்டு எடுத்துச் சென்றனர். கஞ்சா, 6 கஞ்சா சாக்லெட்டுகள், 20 மி.லி. கஞ்சா ஆயில், ஹோக்கா போதை பவுடர், அதனை பயன்படுத்தும் 7 எந்திரங்கள், போதைப் பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய குழாய் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மாணவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கைதான 1 மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மாணவர்களை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுதலை செய்தது. மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த 3 பேரை 15 நாட்கள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications