சென்னையில் கஞ்சா விற்பனையில் பயங்கர மோதல்- 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை!
சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை செய்வதில் இரு கோஷ்டிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதில், 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகரில் ரஞ்சித்குமார், சக்திவேல், மில்லர், செங்கோட்டையன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் நான்குபேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது துரைப்பாக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் அவர்களை மடக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கலியா (எ) ரஞ்சித்குமார் மற்றும் மில்லர் ஆகிய இரண்டு பேரும் பலியானார்கள்.

படுகாயம் அடைந்த செங்கோட்டையன் மற்றும் சக்திவேல் ஆகிய 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் துரைப்பாக்கதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சென்னையில் துரைப்பாக்கத்தை அடுத்து உள்ள கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே கோஷ்டி பூசல் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த 4 பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications