பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: 80 குழந்தைகள் தப்பினர்
திருத்தணி: திருத்தணியில் பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவு காரணமாக தீ பற்றியது. இது அருகில் இருந்த பள்ளிக்கும் பரவியது மாணவர்கள் அனைவரும் வெளியே ஓடியதால் எந்த வித ஆபத்தும் இன்றி உயிர்தப்பினர்.
திருத்தணி ஒன்றியம், செருக்கனூரில் ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 80 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்காக, பள்ளி அருகில் உள்ள சமையல்கூடத்தில் மதிய உணவு சமைக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு, சமையல்கூடத்திற்கு சென்ற அம்பிகா மற்றும் சின்னபொன்னு என்ற இரு ஊழியர்கள், சமையலுக்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது திடீரென அறை முழுவதும் தீ பற்றியது. ஊழியர்கள் இருவரும் அலறி அடித்து ஓடினர்.
புகை வந்ததை பார்த்த பள்ளி குழந்தைகளும் வகுப்பறைகளை விட்டு வெளியே ஓடினர். தகவல் அறிந்த திருத்தணி தீ அணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 80 குழந்தைகளும் தப்பி உள்ளனர். கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications