7 வயது சிறுமி பலாத்காரம்: தஞ்சை அரசு ஊழியர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை கரந்தை வடக்கு சுண்ணாம்புக் காரத் தெருவை சேர்ந்தவர் மதியழகன் (54). இவர் கரந்தையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வயிறு வலியால் சிறுமி துடிக்கவே சிறுமி யின் பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று மருத்துவரிடம் காட்டி உள்ளனர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் யாரோ பலாத்காரம் செய்து உள்ளனர் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விபரம் கேட்டனர். அப்போது அவர் மதியழகன் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது நான் மயங்கி விழுந்துவிட்டேன் என்றார்.
இது குறித்து சிறுமியின் தந்தை தஞ்சை கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் மதியழகனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 15 - ந் தேதி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததை ஒத்துக் கொண்டார்.
இதையடுத்து போலீசார் மதியழகன் மீது வழக்கு பதிவுச் செய்து கைது செய்தனர். இச்சம்பவம் கரந்தை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications