நாமக்கல்: கொதிக்கும் நீரில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி
நாமக்கல்: கொதிக்கும் நீரில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மதுரையில் குளிர்பானம் என நினைத்து பேன் மருந்தை குடித்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுடுநீரில் விழுந்து மரணமடைந்த சிறுமியின் பெயர் தான்யா என்பதாகும். தான்யாவின் தாயார் மகளை குளிக்க வைப்பதற்காக நன்றாக கொதிக்க வைத்த சுடுநீரை ஒரு வாளியில் ஊற்றி வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்கவே, வேகமாக வந்து எட்டிப்பார்த்தார். அந்த வாளிக்கும் சிறுமி தான்யா விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.

உடனே பதறிய சிறுமியின் தாயார், குழந்தையை எடுத்துக் கொண்டு உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் சிறுமியின் உடல் முழுவதும் வெந்து போனதால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தான்யா உயிரிழந்தாள். இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் மதுரையில் குளிர்பானம் என நினைத்து பேன் மருந்தை குடித்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் 2வது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் துர்காலட்சுமி , 4. வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் எல.கே.ஜி. படித்து வந்தார்.
செவ்வாய்கிழமையன்று அவது வீட்டில் குளிர்பான பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த, பேன் மருந்தை, குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுமியை ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அஜாக்கிரதையால் இருவேறு இடங்களில் இளம் பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள், உயிருக்கு ஆபத்தான பொருட்களை கையாள வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications