உடுமலைப்பேட்டையில் ஹாஸ்டல் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த மாணவி சடலம்... கொலையா?- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹாஸ்டல் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மாணவி சாவு? -வீடியோ

உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் ஒரு மாணவி தண்ணீர் தொட்டிக்குள் இறந்த நிலையில் கிடந்தார். அது தற்கொலையா அல்லது தவறி விழுந்தாரா என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலைப்ப்பேட்டையில் உள்ள அரசுக் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்தார் மாணவி புஷ்பா ஏஞ்சல். இவர் அங்குள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதியில் தங்கி படித்தார்.

Girl's body found dead in Udumalpet ladies hostel

நேற்று தன் அறை தோழிகளிடம் துணி துவைக்கச் செல்வதாக கூறி சென்றிருக்கிறார். ஆனால் நீண்டநேரமாகியும் அறைக்கு வராததால் மாணவிகள் அவரை தேடியுள்ளனர். பிறகு அவரை தண்னீர் தொட்டிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டுள்ளனர்.

அதனையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து உடலை மீட்டனர். மேலும் வழக்கு பதிவுசெய்து புஷ்பா ஏஞ்சல் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Udumalpet college student Pushpa Angel who stayed in government hostel found dead in water tank and police inquiry
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற