”பெண்களே இதை கவனிங்க ப்ளீஸ்”...
சென்னை:இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்குமே இல்லை.தினம்தினம் பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, கொலை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அத்தகைய இக்கட்டான சூழலில் யார் வேண்டுமானலும் மாட்டிக்கொள்ளலாம் என்ற நிலைமையில்தான் தற்போதைய சமூகம் உள்ளது.
அப்படிப்பட்ட நிலைமை வந்தால் எப்படி பெண்கள் தம்மை தற்காத்துக் கொள்ளலாம்...

லிப்ட் ரிஸ்க்:
ஒரு பெண் தன்னுடைய இரவு பணி முடிந்து அப்பார்மெண்ட் வீட்டிற்கு ஒரு முகம் தெரியாத ஆணுடன் லிப்டில் நுழைய நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
சிம்பிள்... லிப்டிற்குள் நுழைந்து விடுங்கள்.நீங்கள் 13ஆவது மாடியை அடைய வேண்டும் என்றால் லிப்டின் எல்லா பட்டன்களையும் அழுத்தி விடுங்கள்.இதன் மூலம் எல்லா மாடிகளிலும் லிப்ட் திறந்து மூடுவதன் மூலம் உங்கள் மீதான தாக்குதலை தவிர்க்கலாம்.

வீடு தேடி வரும் அபாயம்:
வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை யாரேனும் தாக்க நேர்ந்தால் என்ன செய்வது?
உடனடியாக கிச்சனுக்குள் சென்று விடுங்கள்.உங்களுக்கு மட்டும்தான் மஞ்சள்,மிளகாய் பொடி எல்லாம் எங்கு இருக்கும் என்று தெரியும்.மேலும் கத்தி,தட்டுகள் கூட ஆபத்தான ஆயுதங்களாக மாறலாம்.எந்த பாதுகாப்பும் இல்லாத சமயத்தில் இவற்றை அவன் மேல் விட்டெறியுங்கள்.சத்தம் அப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு மிக பெரிய எதிரி.

நள்ளிரவு தன்னந்தனி பயணம்:
நள்ளிரவில் பெண்கள் தனியாக ஆட்டோ,டாக்சி ஏற நேர்ந்தால் என்ன செய்வது?
ஆட்டோவில் ஏறுவதற்கு முன்பாக அதனுடைய ரெஜிஸ்ட்ரேசன் நம்பரை குறித்துக் கொள்ளுங்கள்.உங்களுடைய வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ தொடர்பு கொண்டு டிரைவருக்கு புரியும் விதத்தில் அவரை பற்றியும்,ஆட்டோ பற்றிய விவரங்களையும் தெரிவித்து விடுங்கள்.உங்கள் தொலைபேசி அழைப்பை யாரும் எடுக்காவிட்டாலும் கூறுவது போல் நடிக்கவாவது செய்யுங்கள்.இதன் மூலம் ஆட்டோ டிரைவர் தான் ஏதேனும் தவறாக நடக்க முயற்சித்தால் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்துகொள்வார்.அவரே உங்களுக்கு பாதுகாப்பாகவும் மாறி விடுவார் அந்த சமயத்தில்.

பர்ஸும் பயன்படும் ஆயுதமாய்:
ஆட்டோ டிரைவர் போக வேண்டி இருக்காத சாலையில் நுழையும் போது நீங்கள் அபாயத்தில் இருப்பதாக உணர்ந்தால் என்ன செய்வீர்கள்?
உங்களுடைய பணப்பையின் கைப்பிடியை உங்களது துப்பட்டாவில் முடிந்து கொள்ளுங்கள்.அதனை அவனுடைய கழுத்தில் இறுக்கி பின்னால் தள்ளுங்கள்.அவன் கண்டிப்பாக உதவியற்ற நிலைக்கு தள்ளப்படுவான்.ஒருவேளை பர்ஸ் இல்லையென்றால் அவனுடைய காலரைப் பிடித்து இழுங்கள்.அவனுடைய சட்டை காலர் பட்டனே அவனுக்கு எமனாக மாறிவிடும்.

துரத்துபவனை துரத்தி விடு:
இரவில் நீங்கள் துரத்தப்பட்டால்?
ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ,கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள்.அப்படி இல்லை என்றால் ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள்.அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பார்கள்.மேலும் அங்கு கேமராவும் இருக்கும்.அதனால் யாரும் உங்களை எதுவும் செய்ய இயலாது.

பெப்பர் ஸ்பிரே பாதுகாப்பு:
எப்பொழுதும் பேனா கத்தி,பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றையும் உங்களது கைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள்.இதனால் நாமே நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications