காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்த நிர்வாகியின் காரை அடித்து நொறுக்கிய வாசன் ஆதரவாளர் கைது
சென்னை: காஞ்சீபுரத்தில் நடந்த திருப்போரூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்திற்கு வந்த மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய ஜி.கே. வாசன் ஆதரவாளர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டம் கானாத்தூரில் இருக்கும் காமராஜர் அரங்கில் நவம்பர் 17ம் தேதி மாலை நடக்கும் என்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மாவட்ட பொறுப்பாளர் வி.ஆர். சிவராமன், முன்னாள் மாவட்ட தலைவர் சக்கரபாணி ரெட்டியார் ஆகியோர் ஒரு காரில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.

கார் அரங்கம் முன்பு நின்றதும் அவர்களின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தனர். அப்போது வாலிபர் ஒருவர் உருட்டுக் கட்டையுடன் வந்து காரை அடித்தார். இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கின. இதை பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் பெயர் ஏசுதாஸ் என்றும், முட்டுக்காட்டை சேர்ந்த அவர் ஜி.கே. வாசன் ஆதரவாளர் என்றும் தெரிய வந்தது. போலீசார் ஏசுதாஸை கைது செய்தனர். ஆனால் அவரை தூண்டிவிட்ட முட்டுக்காடு கிருஷ்ணன் என்பவரையும் கைது செய்யக் கோரி காங்கிரஸ் தொண்டர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் செய்தனர். போலீசார் அவர்களிடம் சமாதானமாகப் பேசி மறியலை கைவிடச் செய்தனர்.
இந்நிலையில் செய்தி அறிந்து வாசன் ஆதரவாளர்களும் சம்பவ இடத்தில் கூடினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டதுடன் காங்கிரஸ் ஊழியர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications