முள்ளிவாய்க்கால் சுவரை இடித்ததில் என்ன தப்பு.. கேட்கிறார் ஞானதேசிகன்
சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. எனவே அதை இடித்ததில் என்ன தப்பு உள்ளது என்று கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர், ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டப்பட்டு இருந்ததால் இடிக்கப்பட்டுள்ளது; இதில் தவறு இல்லை. ஆக்கிரமிப்பு தான் அகற்றப்பட் டுள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு மதிப்பளித்து, இம்மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை. வெளியுறவு துறை அமைச்சர், இலங்கை செல்வது முதல்முறை அல்ல. வெளியுறவு துறை அமைச்சராக எஸ்.எம்.கிருஷ்ணா இருந்தபோது, இலங்கை சென்றார்.
தற்போதுள்ள சல்மான் குர்ஷித், இலங்கைக்கு, இரண்டாவது முறையாக செல்கிறார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications