திரும்பிப் போ... எட்டு திசையிலும் ஒலிக்கும் தமிழகத்தின் குரல் #GoBackModi

Posted By:
Subscribe to Oneindia Tamil
  உலக அளவில் டிரெண்டான #gobackmodi என்ற ஹேஷ்டேக்- வீடியோ

  சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியே திரும்பி போ என்று தமிழர்கள் முழக்கமிட்டது எட்டு திசைக்கும் ஒலிப்பதால் மத்திய அரசு ஆடிப்போயுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் மோடிக்கு எதிரான குரல் ஒலிக்கிறது.

  காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி சென்னை வந்தார்.

  மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திசையெங்கும் எதிர்ப்பு

  திசையெங்கும் எதிர்ப்பு

  கறுப்பு சட்டை அணிந்து மறியல் செய்த தமிழர்கள் அனைவரும் திரும்பி போ மோடி என்று முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். மோடியே திரும்பி போ... கோ பேக் மோடி என்ற பதாகைகளுடனும் முழக்கமிட்டனர்.

  வலைத்தளவாசிகளின் எதிர்ப்பு

  மோடிக்கு எதிரான ட்விட்டர் பதிவுகள் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. உலக நாடுகளில் எல்லாம் சுற்றுப்பயணம் செய்யும் மோடி தமிழ்நாட்டிற்குள் வந்து செல்வதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. காவிரியை அழிக்க நரேந்திர மோடியா என்று கேட்கும் இந்த வலைஞர், திரும்பி போ மோடி என்று பதிவிட்டுள்ளார்.

  பிரதமருக்கே பின்வாசலா

  ஒரு நாட்டின் பிரதமரையே பின்புற சுவரை உடைத்து குறுக்கு வழி ஏற்படுத்தி காப்பாற்றி கொண்டுபோக வேண்டிய நிலைமையில் தமிழக ஆட்சியாளர்கள். இதெல்லாம் நாளைக்கு எஸ்டிடி ல வரும்ல என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர். ஐஐடியில் இருந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு பின்வாசல் வழியாக செல்வதை கிண்டல் அடித்துள்ளார் இந்த வலைஞர்.

  எப்படி வரவேற்கணும்

  வந்தாரை வாழ வைத்த தமிழகம். பிரதமரை அவமானப்படுத்தலாமா என்று பலரும் கேட்கின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இவரின் பதிவு அமைந்துள்ளது. விருந்தோம்பல்னா என்னனு சொல்லிக் கொடுக்கலயா?.. யாரை வரவேற்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க என்று கூறுகிறார் இந்த வலைஞர்.

  காவிரியை அழிக்க மோடியா

  கங்கையை தூய்மை படுத்தும் திட்டத்திற்காக 1000 கோடி ஒதுக்கும் மத்திய அரசு காவிரியை அழிக்க நரேந்திர மோடியை அனுப்புவதாக என்று கேட்கிறார் இந்த வலைஞர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  People wore black clothes and were seen carrying and hoisting black flags to protest the Modi visit raising jarring slogans, “Go back Modi”.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற