மர்மாக உயிரிழந்த தலித் இளைஞர் கோகுல்ராஜை ஒரு கும்பல் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நாமக்கல்: திருச்செங்கோடு பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மர்மான முறையில் உயிரிழப்பதற்கு முன்பு அவரை ஒரு கும்பல் அழைத்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கடந்த 23-ந் தேதி நாமக்கல் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காதல் விவகாரத்தில்தான் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டதாக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

கோகுல்ராஜின் உடலை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் குழு பிரேத பரிசோதானை செய்தது. இந்த அறிக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதியன்று திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு மாணவர் கோகுல்ராஜ் அவரது தோழியுடன் வருவதும், பின்னர் 11.53 மணிக்கு ஏழு பேர் கொண்ட கும்பல், அவர்களை வெளியே அழைத்து செல்வதும், அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளன.

இந்த காட்சிகளை தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் இயக்குனர் ராமசாமி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவர் கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்ட கிழக்கு தொட்டிபாளையம் தண்டவாள பகுதியிலும் அக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications